உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நார்த்தாமலை கோவில் திருவிழாவினை முன்னிட்டு வரும் 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2022-04-08 12:11 IST   |   Update On 2022-04-08 12:11:00 IST
நார்த்தாமலை கோவில் திருவிழாவினை முன்னிட்டு வரும் 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி வரும் 11-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை என்ற போதும், அத்தியாவசியத் தேவை கருதி, மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். 

இந்த விடுமுறைக்கான மாற்றுப் பணி நாளாக வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும், வழக்கமாக சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுள்ள  அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலை நாளாகும் என்று  கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News