உள்ளூர் செய்திகள்
பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாள் விழா
ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 42வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் ஊராட்சியில் பா.ஜ.க.வின் 42ம் ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு வாரியங்காவல் சுற்றி முக்கிய வீதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
பேரணியாக 100க்கும் மேற்பட்டோர் தேவனூர் பிரிவிலிருந்து நாகல்குழி பிரிவு வரைக்கும் நடந்து சென்று மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பாரத பிரதமரின் உரையை மருத்துவ பிரிவு தலைவர் இல்லத்தில் வைத்து தொலைக்காட்சியில் மக்கள் மருந்தகத்தின் நன்மைகளை பற்றி எடுத்து கூறினர்.
இதில் மண்டல தலைவர் நீலமேகம், மாவட்ட தலைவர் ஐயப்பன், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அன்புச்செல்வன், வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் விஸ்வநாதன்,மாவட்ட செயலாளர் சந்திரகலா ஆறுமுகம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.