உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-07 12:30 IST   |   Update On 2022-04-07 12:30:00 IST
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லெனின் நகரில் விநாயகர் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயை சில ரியல் எஸ்டேட் கும்பல் கபளிகரம் செய்து கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காரைக்குடி சாலையில் உள்ள குப்பைக் கிடங்கையும், அதனைத் சுற்றியுள்ள இடங்களையும், வேங்கக் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து வாரியையும் அதிகாரிகளின் துணையோடு சிலர் போலியாகப்பட்டா போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி ஆக்கிரமிப்பளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தியும் திருமயம் பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வீரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமயம் ஊராட்சியில் காலம் காலமாக குடியிருந்துவரும் ஏழைகளுக்கு அந்த இடத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

நூறுநாள் வேலைத் திட்டத்தில் அதிகாலையிலேயே வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதைத் தடுத்து காலை 9 மணிக்கு வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50&க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News