உள்ளூர் செய்திகள்
.

தடை செய்யப்பட்ட 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-07 06:24 GMT   |   Update On 2022-04-07 06:24 GMT
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைவாசல்,

தலைவாசல் அருகே காமக்காபாளையம்ஊராட்சி வேதநாயகபுரம் எம்.பி. நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாட்ஸ்-அப் மூலம் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் உத்தரவின்பேரில், தலைவாசல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரமேஷ் (தலைவாசல்), கண்ணன் (ஆத்தூர்) ஆகியோர் தலைமையில் திடீரென ஆய்வு செய்தனர். 

வேதநாயகபுரம் எம்.பி. நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 170 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை பேக்கிங் செய்ய வைக்கப்பட்டிருந்த 190 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் 9 லிட்டர் அமிலம் பறிமுதல் செய்யப்பட்டன. 

அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புகையிலையை உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News