உள்ளூர் செய்திகள்
நீர்-மோர் பந்தலை கென்னடி எம்.எல்.ஏ- திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.

தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-04-07 11:38 IST   |   Update On 2022-04-07 11:38:00 IST
உப்பளம் தொகுதியில் நீர்-மோர் பந்தலை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி:

தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க.  சார்பில் நீர்-மோர் பந்தல் அமைத்து உடல் வெப்பம் தணிக்கும் பழவகைகள் மற்றும் பழச்சாறுகள், காய் வகைகள் பொதுமக்களுக்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் வழங்கினார். 

இதில் தொகுதி செய லாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி காத்தலிங்கம், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர்  தங்கவேல், பிரமுகர்    பிராங்கிளின், இணைஞர்  அணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி,  கிளை செயலாளர்கள்  டேவிட், செல்வம், மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News