உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரியூர் அருகே விவசாயி அடித்துக்கொலை?

Published On 2022-04-06 15:51 IST   |   Update On 2022-04-06 15:51:00 IST
அரியூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 49) விவசாயி. அவருக்கு கவிதா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். 

இந்த நிலையில் நேற்று ஆவாரம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மாந்தோப்பு ஒட்டியுள்ள காலியிடத்தில் கிருபாகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருபாகரனுக்கு கவிதா என்ற மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கவிதா அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் அதே பகுதியை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். 

கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனின் நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருபாகரன் இறந்து கிடந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில் கிருபாகரன் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News