உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மயங்கி விழுந்த விவசாயிக்கு அவ்வழியாக சென்ற மருத்துவர் முதலுதவி

Published On 2022-04-06 15:45 IST   |   Update On 2022-04-06 15:45:00 IST
மயங்கி விழுந்த விவசாயிக்கு அவ்வழியாக சென்ற மருத்துவர் முதலுதவி செய்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி சாமி (வயது 55) விவசாயியான இவர்,

செட்டியாபப்பட்டி வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மயங்கி கீழே விழுந்துள்ளார். பேச்சு மூச்சின்றி கிடந்த அவருக்கு, அவ்வழியாகச் சென்ற ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மு.பெரியசாமி,

உரிய முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, கண்விழித்த அந்தோனிசாமியை 108 அவரச ஊர்தி மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

Similar News