உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி கொத்தமங்கலத்தில் மீண்டும் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட

பொது மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடல்

Published On 2022-04-06 14:15 IST   |   Update On 2022-04-06 14:15:00 IST
பொது மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஓரே நாளில் மூடப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் செயல் பட்டு வந்த 2 அரசு மதுபான கடைகள் 2017ம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டது.

மேலும் இனிமேல் அக் கிராமத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது எனவும் அப்போதைய மாவட்ட  கலெக்டர் அக்கிராம  மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதிகாரிகள் உள்பட இனிமேல் அங்கு டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் எனவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அக்கிராமத்தில் டாஸ்மாக் கடைஒன்றைத்  திறக்க முயல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கிராமசபை தீர்மானத்தையும் மீறி நேற்று கொத்தமங்கலம் கிராமத்தில் மீண்டும் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திடீரெனதிறக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் சாந்தி  வளர்மதி தலைமையிலும், ஊராட்சி துணைத்தலைவர் போது மணி மற்றும் தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலையில் மற்றும் கட்சி சார்பில் கொத்தமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானத்தையும் மீறி சட்டவிரோத மாக டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும், இது குறித்து அடுத்த கட்டமாக கிராமத்தில் உள்ள அனைத்து  மக்களையும் ஒன்று திரட்டி முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடி யாக மூடவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச் செல்வம் கவுன்சிலர் ராமநாதன் மற்றும் பா.ஜ.க. மணிமுத்து ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திறக்கப்பட்ட  டாஸ்மாக்கடையை மூட சுற்றுசுழல்  துறை அமைச்சர்  மெய்யநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் தற்காலிக மாக அந்த கடையை மூட கலெக்டர்   கவிதாராமு  உத்தரவிட்டார்.  இதையடுத்து ஒரேநாளில் திறப்பு விழாவும், மூடு விழாவும் நடந்தேறியது.
இதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் கூறினர்.

கடந்த 2017&ம் ஆண்டு கொத்த மங்கலம் கிராத்தில் செயல் பட்ட 2 டாஸ்மாக் கடைகளை பொது மக்கள் அடித்து நெறுக்கினர்.  மீண்டும் அது போன்ற சம்பவம் நடை பெறாமல் இருக்க முன்னெச் சரிக்கை  நடவடிக்கையாக கடையை மூடியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News