உள்ளூர் செய்திகள்
தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது வழக்கு
தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கிளை மேலாளராக குளத்தூர் நீர்பழனியை சேர்ந்த அஜித்குமாரும், உதவி மேலாளராக தூத்துக்குடி மாவட்டம் லில்லிசேரியை சேர்ந்த அன்னலட்சுமியும் பணிபுரிந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த பாரதி சர்க்கிள் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரூ.2லட்சத்து 29ஆயிரத்து 658 ரூபாய் மதிப்புள்ள 48.400 கிராம் தங்கநகை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. உடனடியாக, இவர் அரிமளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் மீது போலிசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.