உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் உட்பட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்த புதுக்கோட்டை நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சட்டவிரோதமாக கூடுவது, பொது வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.