உள்ளூர் செய்திகள்
கைது

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய சிறுவர்கள் கைது

Published On 2022-04-06 09:26 IST   |   Update On 2022-04-06 09:26:00 IST
14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவரும் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள சிலுவைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் அந்த சிறுவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அறியாத வயதில் அதனை முழுவதுமாக நம்பிய சிறுமியும் நெருங்கி பழகினார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மாணவர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மற்றொரு சிறுவனிடம் பழகுவதை பார்த்த அந்த காதலன் சிறுமியிடம் பழகுவதை நிறுத்தி கொண்டுள்ளார். இந்தநிலையில் சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு வயிறு பெரிதாக இருந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் நீர் கட்டியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் கரும்பு வெட்ட வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி தனியே வீட்டில் இருந்துள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்டு சிறுமியை ஆசை வார்த்தை கூறி புதிதாக பழகிய மாணவரும் பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதானதால் அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சிறுமியிடம் முதலில் பழகி கர்ப்பமாக்கிய பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுவனையும், இரண்டாவது முறையாக பழகிய பத்தாம் வகுப்பு படித்து முடித்து வீட்டிலிருந்த சிறுவனையும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். 14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவரும் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News