உள்ளூர் செய்திகள்
3 ஆண்டுக்குப் பிறகு பொய்கை வாரச்சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்த அதிகாரிகள்
3 ஆண்டுக்குப் பிறகு பொய்கை வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை அதிகாரிகள் வசூல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் மாடு ஆடு கோழிகள் மற்றும் பறவைகள் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
மாலையில் வார சந்தை நடக்கிறது. சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் சுங்க கட்டணம் குறித்து ஏலம் விடப்படுகிறது.கடந்த 2018 &19ம் ஆண்டில் சுங்க வரிவசூல் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது.
அதற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ஏலம் விடப்பட்டது.அதில் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டனர். இதனால் 3 ஆண்டுகளாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பொய்கை வாரச்சந்தையில் அதிகாரி களை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் 30&க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பொய்கை சந்தையில் வியாபாரிகளிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்தனர்.
2 மாடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு ரூ.110 வசூல் செய்தனர். 4 மாடுகளை ஏற்றி வந்தால் ரூ.210 ஒரு கோழி விற்பனை செய்ய ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மேலும் அங்குள்ள கடைகளுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை வாரச்சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ததால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதால் பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.