உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜா:
சொத்து வரி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாலாஜா நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட துணை செயலாளர் சம்பந்தம், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் சுகுமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேதகிரி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், ராணிப் பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் உள்பட நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, மாணவரணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி, வழக்கறிஞர் பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.