உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிறைவு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிறைவு விழா

Published On 2022-04-05 15:14 IST   |   Update On 2022-04-05 15:14:00 IST
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கொத்த கம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் பக்வாடா இரு வார நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் புவியரசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார்.

விழாவில் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிந்து செயலில் பதிவேற்றம் செய்தல், நீர் பாதுகாப்பில் பெண்களின் பங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி குழந்தைகளுக்கு இடையே ரத்த சோகை தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் விழிப்புணர்வு குறித்து மருத்துவர் சசிவர்மன் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சிகள் வைக்கப் பட்டிருந்தது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள், முன்பருவ கல்வி குறித்த விழிப்புணர்வு பாடல்கள், வில்லுப்பாட்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பாடல்கள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப் பாளர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News