உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய கோரிக்கை

Published On 2022-04-05 15:12 IST   |   Update On 2022-04-05 15:12:00 IST
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ் சாலையிலிருந்து பெரியகடைவீதி செல்லும் சாலையில் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கு மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.

இதனால் லோடு டிராக்டர் மற்றும் லாரிகள் செல்லும் போது வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் தடைபடுவதோடு பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே இந்த மின் இணைப்புகளை சரி செய்ய பொதுமக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Similar News