உள்ளூர் செய்திகள்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

சோளிங்கரில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-05 09:41 GMT
சோளிங்கரில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்:

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். சோளிங்கர் நகர தலைவர் கோபால், ஓபிசி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கண்டன உரை ஆற்றினார். இதில் கியாஸ் சிலிண்டர் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து 100&க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இந்தியாவில் வாரம் ஒருமுறை தேர்தல் நடைபெற்றால் மட்டுமே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயராது. 5 மாநில தேர்தல் முடிவு பெற்றவுடன் தற்போது விலையை அதிகரித்துள்ளனர்.

இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருந்தாலும் குறைந்த அளவில் பெட்ரோல், டீசல் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுப ட்டது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News