உள்ளூர் செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகளை இணைக்க திட்டம்
திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ஏ.சி. பெட்டிகளை இணைக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்கு செல்ல நடுத்தர குடும்பத்தினரும் ரெயில்களில் ஏ.சி. பெட்டியை எதிர்பார்க்கின்றனர்.
இதற்காக ஏ.சி. 3 டயர் பெட்டிக்கு முன்பதிவு செய்ய நாட்கணக்கில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி&சென்னை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதுபற்றி திருச்சி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக ஒரு ரெயிலில் 22 முதல் 24 பெட்டிகள் இருக்கும்.
இதில் 9 முதல் 10 ஸ்லீப்பர் கோச்சாக இருக்கும். 2,3 பெட்டிகளில் ஏ.சி. 3 டயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. இல்லாத ஸ்லீப்பர் கோச் ஒன்றை மாற்றி ஏ.சி. 3 டயர் பொருத்த திட்டமிட்டுள்ளது. இதனால் மற்ற பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் வராது என்றனர்.
கூடுதல் ஏ.சி. பெட்டிகள் பொருத்தப்படுவதால் கோடை காலத்தில் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுபற்றி பயணிகள் கூறும்போது, கோடை காலத்தில் ஏ.சி. கோச்சுகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
எனவே ரெயில்வேயின் இந்த திட்டம் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர்.