உள்ளூர் செய்திகள்
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி பேசிய போது எடுத்தப்படம்

நம் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் எளிதாக வெல்ல முடியும்

Published On 2022-04-05 13:30 IST   |   Update On 2022-04-05 13:30:00 IST
நம் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் எளிதாக வெல்ல முடியும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்கநர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை மன்ற விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா ராணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், மாணவர்கள் அனைவரும் புத்திசாலித் தனமாக யோசிக்க வேண்டும். 20 வயதில் விட்டதை 40 வயதில் பிடிக்க இயலாது. எனவே தான் படிக்கும் காலங்களில் மாணவர்கள் கற்றுக்கொள்வதை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்து, அதனை நோக்கிச் செல்ல வேண்டும். நமக்கு நம் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் எளிதாக வெல்ல முடியும். எனவே வாழ்க்கையில் சாதித்த பின்பு ஒவ்வொரு மாணவரும் இயற்கையைக் காப்பற்றுங்கள் என்றார்.

விழாவுக்கு, அக்கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். சுற்றுச் சூழல் துறைத் தலைவர் ராஜசேகர் வரவேற்றுப் பேசினார். ஏற்பாடுகளை முன்னாள் சுற்றுச் சூழல் பிரிவுத் தலைவர் அருள், பேராசிரியர் அனிதா, அறிவொளி, செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News