உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு.

Published On 2022-04-05 05:53 GMT   |   Update On 2022-04-05 05:53 GMT
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள், இனிப்பு கார வகைகள் தயாரிக்கும் பலகாரகடைகள் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
உணவு பொட்டலங்களை கட்டுவதற்கு வாழை இலைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பாலித்தீன் கவர்களை பயன்படுத்துவதாகவும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைபாக்கு வகைகள் பெட்டிக் கடைகள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தி வரும் சூழ்நிலையில் மண், நீர், காற்று ஆகியவைகள் மாசுபடுவதற்கு இதுபோன்ற பொருட்கள் காரணமாக உள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.  எனவே அதிகாரிகள் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News