உள்ளூர் செய்திகள்
காட்பாடி அருகே ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்
காட்பாடி அருகே ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்தனர்.
அவர் விழுப்புரம் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த யுவராஜ் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வந்து அங்கிருந்து விழுப்புரத்திற்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.