உள்ளூர் செய்திகள்
கடும் வெயிலால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் வெறிச்சோடியது
கடும் வெயிலால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. வழக்கமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொது மக்கள் வருவார்கள் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும். மேலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.
சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.மேலும் சாலையோரங்களில் குளிர்பானங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடும் வெயில் காரணமாக இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகின்றனர்.
வெளியே உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.