உள்ளூர் செய்திகள்
வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா
ஆலங்குடி வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்திருவிழா குறித்து கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் ஏப்ரல் 25-ம் தேதி தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது.
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நிகழாண்டு சித்திரை திருவிழா நடத்துவது குறித்து ஊர்க்கூட்டம் நடைபெற்றது. அதில், திருவிழா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், ஏப்ரல் 17-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கும். அன்றிலிருந்து அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஏப்.24-ம் தேதி பொங்கல் விழா நடைபெறும். மறுநாள் ஏப்.25 மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
முக்கனிகளால் அலங்கரிக்கப்படும் தேரில் அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டு, பக்தர்களால் தேர் இழுத்து வரப்படும். நான்கு வீதிகளையும் தேர் சுற்றி வரும்போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
ஏப்.26-ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுளாக தேரோட்டம் நடை பெறாததையடுத்து தற்போது தேர் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.