உள்ளூர் செய்திகள்
விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

குடியாத்தத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-03 15:21 IST   |   Update On 2022-04-03 15:21:00 IST
குடியாத்தத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர், சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான நூல் மற்றும் சாய மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நெசவாளரணி தலைவர் எஸ்.எம்.தேவராஜி தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட ராகுல்காந்தி புரட்சி பேரவை லாலாலஜபதி, சரத்சந்தர், மாவட்ட செயலாளர் ஏ. கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் நகர நெசவாளரணி தலைவர் கோ.ஜெயவேலு வரவேற்றார்.
மாநில நெசவாளரணி தலைவர்ஜி.என். சுந்தரவேல் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டர், பைக் ஆகியவற்றை வைத்தும், கார், ஆட்டோ ஆகியவற்றில் கயிறு கட்டியும் இழுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மாவட்ட நெசவாளரணி பொதுச்செயலாளர் ஜி. நயீம்பர்வேஸ், முன்னாள் மாநில மாணவரணி தலைவர் ஜெ.தியாகராஜன், மாநில நெசவாளரணி பொருளாளர் விமல்காந்த், வக்கீல் பிரிவு நந்தகுமார், மாநில பேச்சாளர்கள் துரைமுருகேசன், அருள், பேரணாம்பட்டு நகர முன்னாள் தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News