உள்ளூர் செய்திகள்
விழாவில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங

மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Published On 2022-04-03 14:58 IST   |   Update On 2022-04-03 14:58:00 IST
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  மழலை  மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி  சிறப்புரை நிகழ்த்தினர்.

அவர் பேசும்போது, மாணவர்களின் முன்னேற்றத்தில் பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிடவும் கூடுதலான பொறுப்பு பெற்றோர்களுக்கு  இருக்கிறது.  ஏனென்றால்  இன்றைய நிலையில் நடைபெறும் குற்றங்களை கணக்கெடுத்தால் இளைஞர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பதால்தான். ஆகவே இந்த பட்டமளிப்பு விழா நாளில் பெற்றோர்கள் உறுதியெடுத்துக்கொள்ளுங்கள்.  

உங்கள் குழந்தைகளிடம் நல்ல கனவை விதையுங்கள். அவர்கள் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக வருவதை விடவும் முதலில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று பேசினார்.

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை தாங்கினார்.   பள்ளியின் சட்ட ஆலோசகர் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.   

விழாவில் பள்ளி ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி பெற்றோர்   ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன், வேங்கடசுப்பிரமணியன், பள்ளி துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர் கௌரி, பள்ளியின் மேலாளர் ராஜா, ஆசிரியைகள் சந்திரகலா, பவுலின் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஆசிரியை பவானி மற்றும் காசாவயல் கண்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக ஆசிரியை சிம்ரன் பிரைட் நன்றி கூறினார்.

Similar News