உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு இன்வெர்ட்டர் கருவி வழங்கப்பட்ட காட்சி.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இன்வெர்ட்டர் எந்திரம்

Published On 2022-04-03 14:52 IST   |   Update On 2022-04-03 14:52:00 IST
ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கோடை காலத்தையொட்டி இன்வெர்ட்டர் எந்திரம் வழங்கப்பட்டது.
புதுககோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் முனியசாமி,   காளீஸ்வரி தம்பதியர் தடையில்லா மின்சாரம் வழங்க இன்வெர்ட்டர் வழங்கினர்.

இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் ஆசிரியர் பயிற்றுநர் பயிற்றுநர் குமாரசாமி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி போதும்பொண்ணு பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வாசம்,    

சத்துணவு அமைப்பாளர் குமார் ஆசிரியர்கள்,  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வட்டார வள மையத்தினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்  கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ரூ.1000  வழங்கி  தம்மை பள்ளி புரவலராக இணைத்துக்கொண்டார்.

Similar News