உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடை பெற்ற போது எடுத்த படம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Published On 2022-04-03 14:24 IST   |   Update On 2022-04-03 14:24:00 IST
ஜெயங்கொண்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல் சூப்பிரண்டு  பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில்

ஜெயங்கொண்டம் துணைசூப்பிரண்டு கதிரவன் அறிவுறுத்தலின்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளர் சுமதி தலைமையில்

காவல் துறை சார்பாக ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கும் விதமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டது.  குழந்தைகளை படிக்க வைப்பது,

பெற்றோர்கள் இருவரும்   வேலைக்குச் சென்றால் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் பாது காப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News