உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் அருகே ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஆந்திர மாநிலம் கச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் ரெயில் அரக்கோணத்திற்கு வந்தது. ரெயில்வே போலீசார் அதில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கடைசி பெட்டியில் கேட்பாரற்று பைகள் இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து யார் கடத்தியது என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.