உள்ளூர் செய்திகள்
சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், ஒன்றிய பெருந்தலைவர் கலைக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகள் பயன்படும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நெல் விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையத்தில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.