உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் மார்க்கெட்டில் பழைய கடைகளை அகற்றி புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு- நகராட்சி தலைவர் தகவல்
சோளிங்கரில் மார்க்கெட்டில் பழைய கடைகளை அகற்றி புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சோளிங்கர்:
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் சோளிங்கர் பேரூராட்சியாக இருக்கும் போது 1979-ல் 30-கடைகளும், 1987-ல் 31 கடைகளும் கட்டப்பட்டு தினசரி காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடங்கள் தற்போது மிகவும் சேதமடைந்துள்ளதால் பழைய தினசரி காய்கறி மற்றும் மளிகை கடைகளை அகற்றி புதிய கட்டிடம் கட்ட நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் துணைத்தலைவர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விரைவில் பழயை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டிடத்துக்கான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைகள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
மார்க்கெட்டுக்கு செல்லும் வழி மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த மார்க்கெட் சந்தை தெரு விரிவாக்கம் செய்யப்படும் என்றனர்.