உள்ளூர் செய்திகள்
வேன் விபத்து நடந்தது எப்படி?

வேன் விபத்து நடந்தது எப்படி? காயமடைந்தவர் கண்ணீர் பேட்டி

Published On 2022-04-03 07:49 GMT   |   Update On 2022-04-03 07:49 GMT
திருப்பத்தூர் அருகே மலையில் கவிழ்ந்தது 11 பேர் உயிரை பறித்த விபத்து குறித்து காயமடைந்தவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
11 பேர் பலியான வேன் விபத்தில் புலியூரை சேர்ந்த துக்கன் (வயது 35) என்பவரும் காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் விபத்து நடந்தது எப்படி என்று கூறியதாவது:-

ஜவ்வாது மலை சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பள்ளிவாசல் நாடு பகுதியிலில் உள்ள கிராம மக்கள் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அதன்படி புலியூரை சேர்ந்த கிராம மக்கள் பெண்கள், சிறுமிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வேனில் 12 மணிக்கு சென்று கொண்டிருந்தோம். கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் லோடை வேன் இழுக்க முடியாமல் அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் கீழே விழுந்து உருண்டு சென்றோம். வேன் ஒரு பக்கம் கீழே உருண்டு விழுந்தது. அந்த அந்த பகுதியில் ரோடு போட ஜல்லி கற்கள் கொட்டி வைத்துள்ளனர். பலர் அந்த ஜல்லி மீது விழுந்ததால் பலத்த காயமடைந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள பெரிய பாறாங்கல் உருண்டு வந்து கீழே விழுந்து கிடந்த பெண்கள் மீது விழுந்ததால் அந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என கண்ணீர் ததும்ப கூறினார்.
Tags:    

Similar News