உள்ளூர் செய்திகள்
நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த போது எடுத்த படம்.

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

Published On 2022-04-03 12:59 IST   |   Update On 2022-04-03 12:59:00 IST
ஆலங்குடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு ஆலங் குடி அடுத்து உள்ள அண்ணா நகரில் சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.

இந்நிலையில்,  நேற்று தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் திடீரென தீ பற்றி எரிந்தன. இதுகுறித்து அந்த வழியாக நடந்து சென்றவர்கள் ஆலங்குடிதீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவ லர் சரவணகுமார் மற்றும் மீட்பு குழுவினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர்.

இருப்பினும்,  சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் தீக்கிறையாகின.


Similar News