உள்ளூர் செய்திகள்
வேலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்
வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாகித் பாஷா, ரகு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.