உள்ளூர் செய்திகள்
பொருளாதார நிலை அழியாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்
உப்பு உற்பத்திக்கு பொருளாதார நிலை அழிந்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என உற்பத்தியாளர், தொழிலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளர் ஐ.என்.டி.யூ.சி உப்பளத் தொழிலாளர்கள் சங்கம், வேதாரண்யம் உப்பு வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.. நகர மன்ற தலைவரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி., பி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தென்னரசு, செயலாளர் செந்தில், வியாபாரி சங்க பொருளாளர் வேதரத்தினம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்தியா முழுவதும் சிறு குறு உப்பு உற்பத்தியை கார்ப்பரேட் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தை கைவிடக் கோரியும் இந்திய உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது தமிழகத்திற்குள் வேதாரண்யம் 2வது பெரிய உற்பத்தி மையமாகவும், இந்திய கரையோர நிலங்கள் 17,18ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனியிடம் 1819ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து உள்ளது.
பிரிட்டிஷ் அரசின் காலத்தில் 1930ல் மகாத்மா காந்தியின் தலைமையில் தண்டியில் உப்பு யாத்திரையும் வேதாரண்யத்தில் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பிறகு காந்தி& இர்வின் ஒப்பந்தப்படி இந்திய மக்கள் உப்பு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய அரசின் உப்பு துறை 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கனவே தானாக முன்வந்து உப்பு உற்பத்தி செய்யும் சிறு மற்றும் குறு நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு குத்தகையை புதுப்பித்து தந்து கொண்டிருந்தனர்.
இதனால் 700&க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், 10 ஆயிரம் உப்பள தொழிலாளர்களும் பயனடைந்து வந்தனர் தற்போது ஒன்றிய அரசு குத்தகையை புதுப்பிக்காமல் டெண்டர் ஏல முறையை கொண்டு வருவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க எத்தனிக்பதாக கருதுகிறோம். இதனால் வேதாரண்யம் பகுதியில் 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது
கடல் நீரையும், சூரிய வெப்பத்தையும், மனித உழைப்பையும் மட்டுமே முதலீடாக கொண்ட இந்த உப்பு உற்பத்தி மண்ணின் சமூக பொருளாதார நிலைமையை அழித்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சரை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து சங்கப் பிரதிநிதிகள் நேரடியாக மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.