உள்ளூர் செய்திகள்
பட்டு வளர்ப்பதில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு
அரியலூரில் பட்டு வளர்ப்பதில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பட்டு விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ரொக்கப்பரிசுகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி னார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவுமானியம் ரூ.10,500 ம், புழுவளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சமும், புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52,500ம் வழங்கப் பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறையின் திருச்சி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்குட்பட்ட
அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கி னார்.நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் முதல் பரிசாக கொடுக்கூர் பட்டு விவசாயி செல்வகுமார் என்வருக்கு ரூ.25,000ம், 2ம்பரிசாக வேம்புக்குடி விவசாயி கலிய மூர்த்திக்கு ரூ.20,000&ம், 3ம் பரிசாக கண்டிராதித்தம் விவசாயி ஜெயபாலுக்கு ரூ.15,000&ம் ரொக்கப் பரிசுகளை கலெக்டர் வழங்கி னார்.
மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் தற்பொழுது பட்டுக் கூடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.750க்கு மேல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதற்கு சொட்டுநீர் பாசனம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும்,
பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசா யிகள் உரியமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.