உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்தால் பரிசு

Published On 2022-04-02 15:16 IST   |   Update On 2022-04-02 15:16:00 IST
தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்தால் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்து, சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்து,  அதில் சிறந்து விளங் கும் விவசாயிகளுக்கு மாவட்ட  அளவில் முதல் பரிசாக  ரூ.15 ஆயிரமும், இரண்டாவது   பரிசாக ரூ.10 ஆயிரமும்,  மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங் கப்பட உள்ளது. 

தகுதியான விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை  உதவி  இயக்குநர் அலுவலகத்தில்  7-ந்தேதிக்குள் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News