உள்ளூர் செய்திகள்
பெட்ரோல்

சிவகிரியில் பெட்ரோல் விலை ரூ.109-ஐ தாண்டியது

Published On 2022-04-02 06:29 GMT   |   Update On 2022-04-02 06:29 GMT
தென்காசி மாவட்டம் சிவகிரியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.46-க்கு விற்பனையானது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 109.22 ஆக இருந்தது.
சிவகிரி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தினந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 12 நாட்களில் இன்று 10-வது முறையாக அவற்றின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

நெல்லையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.74-க்கு விற்பனையானது. இன்று அதன் விலை மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.50 ஆனது. இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.97.84-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலையும் 76 காசுகள் உயர்ந்தது. அதன்படி ஒரு லிட்டர் ரூ.98.60-க்கு விற்பனையானது.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.46-க்கு விற்பனையானது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 109.22 ஆக இருந்தது.

இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.98.54 ஆக இருந்தது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.99.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆலங்குளத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.68-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.98.78-க்கும் விற்பனையானது.

தூத்துக்குடியில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.107.80-க்கும், டீசல் லிட்டர் ரூ.97.89-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ரூ.108.55-க்கும், டீசல் லிட்டர் ரூ.98.65-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News