உள்ளூர் செய்திகள்
அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்த காட்சி.

செல்லிப்பட்டு அரசு பள்ளியில் முப்பெரும் விழா

Published On 2022-04-02 11:24 IST   |   Update On 2022-04-02 11:24:00 IST
செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுச்சேரி செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு நாள், தண்ணீர் நாள் மற்றும் சர்வதேச பொம்மலாட்ட நாள் சிறப்பு நிகழ்ச்சி  என முப்பெரும் விழா நடைபெற்றது. 

ஆசிரியர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற நிறுவனர் அருண் நாகலிங்கம் கலந்து கொண்டு சர்வதேச சிட்டுக்குருவிகள் நாள் பற்றி சிறப்புரை ஆற்றினார். 

தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம் பொம்மலாட்டம் மூலம் காடும் யானையும், முதலுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் வளம் காப்போம், தண்ணீர் சிக்கனம் பற்றி வலியுறுத்தினார்.

 நிகழ்வின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 

Similar News