உள்ளூர் செய்திகள்
கறம்பக்குடி மீனம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.

கறம்பக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2022-04-01 16:04 IST   |   Update On 2022-04-01 16:04:00 IST
கறம்பக்குடி மீனம்பட்டியில் முனியாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை    மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், வாரைவளர் வாராப்பூர் நாட்டைச்  சேர்ந்த  வளங் கொண்டான்விடுதி ஊராட்சி மீனம்பட்டி கிராமத்தில் முனியாண்டவர்   கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட  தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் கீரனூர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் தாங்கினார்.

புதுக்கோட்டை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும்,   அ.தி.மு.க. கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை    வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,  

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தவ. பாஞ்சாலன், மாவட்ட மருத்துவரணி  பொறுப்பாளர்  மு.க.முத்துகருப்பன் கலந்து கொண்டனர்.  

விழாவில் திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்  கலந்து  கொண்டன. ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய வீரர்கள் 200 பேர் மருத்துவ சோதனைக்குப்பின் களமிறக்கப்பட்டனர்.  

காளையை அடக்கிய வீரர் களுக்கும் மற்றும் காளைக ளுக்கும் ரூ.10 லட்சம் மதிப் புள்ள  தங்க  நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு  மருத்துவகுழு அவசரகால  ஊர்தி ஏற் பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில்       ஜல்லிக்கட்டு காளையை  அடக்கிய  40 வீரர்களுக்கு காயம் ஏற்பட் டது. 7 பேர் மேல்சிகிச்சைக் காக  புதுக்கோட்டை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. வடி வேல், கறம்பக்குடி காவல் துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், மழையூர் சப்& இன்ஸ்பெக்டர் ராஜூ செய்திருந்தனர்.  

விழாவிற்கான   ஏற்பாடுகளை  மீனம்பட்டி  கிராம பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் செய்திருந்தனர்.

Similar News