உள்ளூர் செய்திகள்
வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-04-01 15:50 IST   |   Update On 2022-04-01 15:50:00 IST
வழக்கறிஞர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் பிரவீனாமேரி, அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், திருமயம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் வீரமுத்து. இவர்  தன்னை பற்றி அவதூறாக,  மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக செய்தி பரப்பியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் அரிமளம் போலீசார்  வீரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த வழக்கறிஞர்கள், வீரமுத்துவிற்கு ஆதரவாக,

இன்று நீதிமன்ற வளாகம் முன்பாக திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடனடியாக போலீசார் வந்து வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சமரசம் ஏற்படாத வழக்கறிஞர்கள், போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற வளாகம் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் வழக்கறிஞர் மீது தவறான புகார் கொடுத்த தாசில்தாரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News