உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற அரசு நூலகத்துக்கு பயிற்சி புத்தகங்கள்
நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற அரசு நூலகத்துக்கு பயிற்சி புத்தகங்களை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
நீட் நுழைவு தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பூரணாங்குப்பம் அரசு நூலகத்துக்கு நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு அசோகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆனந்தன் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு புத்தகங்களை நூலக அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் தவளக்குப்பம் ராமு, பூரணாங்குப்பம் எழில்ராஜா, தட்சிணாமூர்த்தி, குமாரசாமி, வாழுமுனி, திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.