உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ரமண சரஸ்வதி

மின்பாதைகளில் இடையூறாக உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்

Published On 2022-04-01 15:18 IST   |   Update On 2022-04-01 15:18:00 IST
மின்பாதைகளில் இடையூறாக உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

அரியலூர்  மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து  ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும்    மின்பாதைகளில் இடையூறாக  கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பரபதாகைகள் கட்டப்பட்டுள்ளது.

இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மற்றும் எரியிழை சரிசெய்யும் பணி மேற்கொள்ளும்போது  மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே விபத்தினை தவிர்க்கும் பொருட்டு மின்பாதைகள் மற்றும் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலை களின் அதிர்வினால் மின் கம்பிகள் ஒன்றுடன்ஒன்று பின்னிக்கொண்டு மின் கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும்  அடிக்கடி  மின் தடை ஏற்படுவதோடு  மின் மாற்றிகளில் பழுது ஏற்படுகி றது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News