உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசு வழங்கிய காட்சி.

ராணிப்பேட்டையில் சுதந்திர தின பெருவிழா கண்காட்சி நிறைவு

Published On 2022-04-01 15:12 IST   |   Update On 2022-04-01 15:12:00 IST
ராணிப்பேட்டையில் சுதந்திர தின பெருவிழா கண்காட்சி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு நாள் விழா நடந்தது.

இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

நம் நாட்டின் விடுதலைக்காக பல தலைவர்கள் பல போராட்டங்களை கண்டு அவர்களுடைய உயிரைத்தந்து நமக்கு விடுதலையை பெற்று தந்திருக்கின்றார்கள். அவர்கள் இல்லையேல் நாம் இன்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. 

அதனை நாம் அனைவரும் உணர்ந்து நாட்டினை பாதுகாத்து, போட்டி, பொறாமையற்ற. சாதி மத பேதமற்ற, ஒரு முன்னேறுகின்ற தமிழகத்தையும், இந்தியாவையும் உருவாக்க வேண்டும்.

மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினை சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக துவக்கி வைத்துள்ளார்கள். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இந்த கலை நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் உணர்ந்து ஒருமுறை தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் இல்லா ராணிப்பேட்டை என்ற நிலைய அடைய அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாநில, மாவட்ட சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

இந்திய சுதந்திர வரலாறு குறித்த மாவட்ட அளவில் கல்லூரி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம். பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த 9 மாணவ மாணவிகளுக்கு பரிசும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்களும், பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்த துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷே.முஹம்மது அஸ்லம், நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா. டி.எஸ்.பி.பிரபு. திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை.வசந்தி ஆனந்தன், செயற்பொறியாளர், ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தஅசோக், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இராதா கண்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News