உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மீன் பிடிக்க விரித்த வலையில் 300 கிலோ மாயம்

Published On 2022-04-01 14:59 IST   |   Update On 2022-04-01 14:59:00 IST
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க விரித்த வலையில் 300 கிலோ வலையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேதாரண்யம்:

வேதராண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டவர்-. இவர் தனக்கு சொந்தமான படகில் சக மீனவர்கள் சிலருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் சுமார் 650 கிலோ வலையை விரித்து விட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் படகில் அனைவரும் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எழுந்து பார்த்த மீனவர் ஆண்டவர் தாங்கள் விரித்திருந்த வலையை மீன்கள் கிடைத்திருக்கும் என்ற நிலையில் படகில் இழுத்து போட்டனர்.

அப்போது சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையிலான வலையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. யாரோ நள்ளிரவில் இவர்களது வலையில் பாதியை திருடி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடலில் மீன் பிடித்தபோது வலைகள் திருட்டு போன சம்பவம் சக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News