உள்ளூர் செய்திகள்
மதகடிப்பட்டில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து மதகடிப்பட்டில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-01 09:23 GMT   |   Update On 2022-04-01 09:23 GMT
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து மதகடிப்பட்டில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.
புதுச்சேரி:

வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை கண்டித்து மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் புதுவை பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட்டு இடஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் இடஒதுக்கீடு கிடைக்குமாறு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் திருபுவனை தொகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார்  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பா.ம.க.வினரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News