உள்ளூர் செய்திகள்
நகராட்சி நியமனக் குழு உறுப்பினராக தி.மு.க. கவுன்சிலர்
புதுக்கோட்டை நகராட்சி நியமனக் குழு உறுப்பினராக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி குழு உறுப்பினர்கள் தி.மு.க. சேர்ந்தவர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 42 கவுன்சிலர்களில் 30 கவுன்சிலர்கள் கலந்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.வினர் வரவில்லை. நியமனக்குழு உறுப்பினராக 36வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற வளர்மதி சாத்தையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒப்பந்தக்குழுவிற்கு தி.மு.க.வை சார்ந்த எட்வர்ட் சந்தோசநாதனும், வரி விதிப்பு மேல்முறையீடு குழுவிற்கு தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி, ரமேஷ்பாபு, லதாராமலிங்கம், அடைக்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சக கவுன்சிலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத்அலி, உட்பட கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.