உள்ளூர் செய்திகள்
ஆண்டிமடம் அருகே ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நள்ளிரவில் ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிட நல்லூர் கிராமத்சை சேர்ந்தவர் புகழேந்தி சுரேஷ். ராங்கியம் பகுதி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மாமனார் பழனிசாமி மாநில ஒப்பந்தகாரராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர்.
கவுன்சிலர் புகழேந்தி சுரேசும், அவரது கணவரும் வீட்டின் முன் பக்கத்தில் உள்ள அறையில் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரொக்கப் பணம் ரூ. 3 லட்சத்து 90 ஆயிரத்தை கைப்பையில் இருந்த வங்கி பாஸ்புக், காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களோடு சேர்த்து எடுத்துக்கொண்டனர்.
பின்னர் கவுன்சிலர் புகழேந்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் குழந்தை ஆகியோர் தூங்கி கொண்டிருந்த அறைக்கு கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் புகழேந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச்சங்கிலியை அறுத்து எடுத்தனர்.
தாலிச்சங்கிலியை அறுக்கும் பொழுது விழித்துக்கொண்ட புகழேந்தி சத்தம் போட்டவுடன் திருடர்கள் பின்பக்கத்தில் உள்ள தோட்டம் வழியாக தப்பி ஓடி மறைந்தனர்.
அதேபோல் அருகிலுள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி சந்திரா. இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் நகைகளையும் 6 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய் டிக்ஸி சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.