உள்ளூர் செய்திகள்
கல்லூரி ஆண்டு விழாவில் மாணவனுக்கு பரிசு வழங்கிய காட்சி

கல்லூரி ஆண்டுவிழா

Published On 2022-03-31 15:36 IST   |   Update On 2022-03-31 15:36:00 IST
கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் புதுப்பிக்கப்பெற்ற இயற்பியல் ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறைக திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சன் மார்க்க சபை தலைவர்பழனியப்பன் தலைமைவகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராசு ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரிக்குழு தலைவர் நாகப்பன் சிறப்பு அழைப்பாளர்கள் குறித்த அறிமுக உரையாற்றினார்.

புதுப்பிக்கப்பட்ட இயற்பியல் ஆய்வுக்கூடத்தை திருச்சி கிளாஸிக் குழும தலைவர் எஸ்.ஆதப்பன், வகுப்பறைகளை காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மைக்கழக தலைவர் பழ.ராமசாமி ஆகியோர் திறந்துவைத்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இலக்கிய சொற்பொழிவாளர் சொற்சிலம்பர் பேராசிரியர் மா.சிதம்பரம் பேசினார்.

நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இலக்கிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரிக்குழு தலைவர் கண்ணன், செயலர் சுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர். பேராசிரியர்கள் பழனியப்பன், முடியரசன், முருகேசன், தமிழ்ச்செல்வி, பிருந்தா ஆகியோர் பங்கேற்றனர்.


முன்னதாக உதவிப்பேராசிரியர் அழகம்மை வரவேற்றார். உதவிப்பேராசிரியர் முகமது இப்ராஹிம் மூசா நன்றி கூறினார்.

Similar News