உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குடிநீர் பிரச்சினைக்கு உறுதியான நடவடிக்கை

Published On 2022-03-31 15:20 IST   |   Update On 2022-03-31 15:20:00 IST
குடிநீர் பிரச்சினைக்கு உறுதியான நடவடிக்கை தேவை என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர்மன்ற முதல் கூட்டம், அதன் தலைவர் செ.திலகவதி தலைமையிலும், துணைத்த¬லைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

பொதுக்கழிப்பறைகளுக்கு தடையில்லா தண்ணீர் வசதியை உத்தரவாதப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தலைவர் திலகவதி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநதிதிக்கு சிலை வைத்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களுக்கான மைக்குகள் சரியாக செயல்படவில்லை. மேலும் உறுப்பினர்கள் பேசியதை தலைவர், அலுவலர்கள் கூட கேட்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் தலைவர் பேசுவதற்கு சிறப்பு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உறுப்பினர்களுக்கு அவ்வாறு செய்யப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் ஒலிபெருக்கியை சரி செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News