உள்ளூர் செய்திகள்
ஊழியர்கள் சாலையோர பேனர்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்ட காட்சி.

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றம்

Published On 2022-03-31 15:02 IST   |   Update On 2022-03-31 15:02:00 IST
ஆலங்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை:

ஆலங்குடி பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சட்ட விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் ஆங்காங்கே அதிக அளவில்  பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாகவும்  ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேலுக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து   ஆலங்குடி டி.எஸ்.பி.   வடிவேல் மற்றும் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் ஆகியோர் உத்தரவின் பேரில்,

ஆலங்குடி காவல் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் எஸ்.பி. சி.ஐ.டி. தனிப்பிரிவு ராஜா மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News