உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மக்களை அச்சுறுத்தும் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றாது - அமைச்சர் தகவல்

Published On 2022-03-30 15:01 IST   |   Update On 2022-03-30 15:01:00 IST
மக்களை அச்சுறுத்தும் எந்தவொரு அபாயகரமான திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றாது என்றுஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுரமின் விளக் கினை  சுற்றுச்சூழல்,  கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று  காலை  திறந்து வைத்தார்.

பின்னர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  தமிழகத்தில்  உள்ள அனைத்து  மாவட்ட  விளையாட்டரங்குகளிலும் சிந்தடிக் டிராக் (வழித்தடம்) அமைக் கப்படும்.  புதுக்கோட்டை மாவட்ட    விளையாட்டரங்கம் மேம்படுத்தப்படும். மக்களை  அச்சுறுத்தும்  எந்த வொரு அபாயகரமான திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி தராது.

தமிழகம், இந்தியா மட்டு மல்லாது உலக அளவில் தமிழக முதல்வர் சுற்றுசூழல் ஆர்வலராக , பாதுகாவலராக இருக்கிறார். நடைபயிற்சி செல்ல விருப்பப்படுவர்கள் நம்பர்களை சேகரித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு நடை பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டரங்கம் டெண்டர் விடப்பட்டதில் ரூ.4.62 கோடிக்கு பதிலாக ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு விடப்பட்டதால் குளறுபடி நடந்துள்ளது.

எனவே பணிகள் பாதியில் நிற்கிறது. தமிழக முதல்வரி டம் இதுகுறித்து அறிவித்து உரிய நடவடிக்கை எடுத்து முழு நிதி பெற்று விரைவில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News